Home /News /tamil-nadu /

ராஜேந்திர பாலாஜி எந்நேரமும் கைதாக வாய்ப்பு - பெங்களூருவில் பதுங்கலா?

ராஜேந்திர பாலாஜி எந்நேரமும் கைதாக வாய்ப்பு - பெங்களூருவில் பதுங்கலா?

Rajendra Balaji

Rajendra Balaji

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 6 தனிப்படை மூலம் தேடுதல் வேட்டை தீவிரம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பணமோசடி வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி எந்நேரமும் கைதாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக  எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி ஆனதை தொடர்ந்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் தற்பொழுது மேலும் 3 தனிப்படை அமைத்து மொத்தம் 6 தனிப்படை மூலம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க:  ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியல் - போக்குவரத்து முடக்கம்

    ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தேவைப்பாட்டால் ஒரு தனிப்படை பெங்களூரு செல்லும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக ராஜேந்திர பாலாஜி எந்நேரமும் கைதாகக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக அதிமுகவினர் பரபரப்படைந்துள்ளனர்.
    Published by:Arun
    First published:

    Tags: ADMK, Rajendra balaji

    அடுத்த செய்தி