ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பசும்பொன் சென்ற முன்னாள் அமைச்சர்கள் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 6 கார்கள் சேதம்... ஒருவர் காயம்!

பசும்பொன் சென்ற முன்னாள் அமைச்சர்கள் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 6 கார்கள் சேதம்... ஒருவர் காயம்!

முன்னாள் அமைச்சர்கள் சென்ற கார் விபத்து

முன்னாள் அமைச்சர்கள் சென்ற கார் விபத்து

தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனம் விபத்தில் சிக்கியது மானாமதுரை அருகே முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன் மற்றும் காமராஜ் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முத்துராமலிங்க தேவர் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொனில்  அவர் நினைவிடத்திற்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனம் விபத்தில் சிக்கியது.

  ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நிகழ்வு இன்று நடைபெறுகிறது.  இந்த நிகழ்வில் வருடம்தோறும் முதலமைச்சர் தொடங்கி முன்னணி அரசியல் பிரமுகர்கள், சமுதாய மக்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் பசும்பொன்னில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதேபோல பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்திவருகின்றனர்.

  இதையும் படிங்க : காவல்துறைக்கு நன்றி : உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் கருணாஸ்!

  அந்தவகையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  ராமநாதபுரம் பசும்பொனில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி உதயகுமார், எம்.எல்.ஏக்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புலான் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

  முன்னாள் அமைச்சர்கள் சென்ற கார் விபத்து

  முன்னதாக  முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜய பாஸ்கர், பாஸ்கரன் உள்ளிட்டோர் பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றனர். சிவகங்கையிலிருந்து  மானாமதுரை நெடுஞ்சாலையில் அவர்கள் கார்கள் அணிவகுத்து சென்ற நிலையில், அப்போது கார் ஒன்று எதிர்பாராத விதமாக குறுக்கே வந்துள்ளது. இதனால் முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்ததால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சென்ற கார்கள் வரிசையாக ஒன்றின் மேல் ஒன்று மோதிக்கொண்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன், காமராஜ் சென்ற கார்கள்  உட்பட 6 கார்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இந்த விபத்தில் திருவாரூரைச்சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Accident, ADMK, Muthuramalinga Thevar