• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் டெல்லி பயணம் - பாஜகவில் சேருகிறாரா?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் டெல்லி பயணம் - பாஜகவில் சேருகிறாரா?

கே.டி.ராஜேந்திர பாலாஜி,

கே.டி.ராஜேந்திர பாலாஜி,

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மோடி தான் எங்கள் டாடி என்றும், பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது என பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர்

  • Share this:
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை 11 மணியளவில் விமானம் மூலம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். அவரது டெல்லி பயணம் அரசியல் அரங்கில் பரபரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீதான பிடி இறுகும் நிலையில் அவரின் டெல்லி பயணத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார், இருப்பினும் திமுகவின் தங்கபாண்டியனிடம் அவர் தோல்வி அடைந்தார்.

Also Read:  ரவி தாஹியாவின் ஒலிம்பிக் பதக்கத்தால் திகார் சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்..

பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது அதிரடியான கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இவரின் கருத்துக்களால் சில நேரங்களில் அதிமுக தலைமைக்கே சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக 2019ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மோடி தான் எங்கள் டாடி என்றும், பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது என பேசி பரபரப்பை கூட்டினார்.

சர்ச்சை பேச்சுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, அமைச்சராக இருந்த போதே பாஜக கொள்கைகளுக்கும், பிரதமர் மோடிக்கு இணக்கமான வகையிலுமே பேசி வந்தார். இதன் காரணமாகவே அவரிடம் இருந்து விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

Also Read: கொரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப்பில் டவுன்லோடு செய்வது எப்படி?

பாஜகவில் ஐக்கியமா?

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார், அமித்ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   இதன் மூலம் அவர்  பாஜகவில் சேரப் போவதாகவும் பேசப்படுகிறது.

இதனிடையே, டெல்லியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். நாளை கட்சியின் தேசிய தலைவர் நட்டாவை சந்திக்கிறார். ராஜேந்திர பாலாஜியின் டெல்லி விஜயம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கு:

ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு வேகம் எடுத்திருக்கும் இந்த நேரத்தில் அவரது டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: