Home /News /tamil-nadu /

கோவையில் 70 கிலோ பார்மலின் தடவிய மீன்கள் பறிமுதல்...! பொதுமக்கள் அதிர்ச்சி

கோவையில் 70 கிலோ பார்மலின் தடவிய மீன்கள் பறிமுதல்...! பொதுமக்கள் அதிர்ச்சி

மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. வங்காளம், அசாம் மற்றும் நாட்டின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளில் மீன் கட்டாயம் இருக்கும். அவர்கள் அதிகளவு மீன் உணவுகளை நேசிப்பதை நாம் சில சமயங்களில் வேடிக்கையாக பார்த்திருக்கலாம், இல்லை கேலி கூட செய்திருக்கலாம். ஆனால் மீன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்பது உண்மையே. மீன் சாப்பிடுவதில் ஒரு சுவையான காரணி உள்ளது.

”பார்மலின் தடவிய மீன்களை சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகள் ஏற்படும் எனவும், தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் கூட உருவாக வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்”

    கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இருந்து 70 கிலோ பார்மலின் தடவிய மீன்கள் மற்றும் 430 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்களை பதப்படுத்துவதற்கான பார்மலின் கலந்த மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்களை வியாபாரிகள் பொது மக்களுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்செல்வன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சோதனை மேற்கொள்வதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் இன்று உக்கடத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை மீன் மார்க்கெட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    சோதனையில் பார்மலின் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 70 கிலோ பார்மலின் தடவிய மீன்கள், 430 கிலோ கெட்டுப்போன மீன்கள் உள்பட 510 கிலோ மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவைகளை அழித்தனர்.

    இதையடுத்து பார்மலின் தடவிய மீன்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்களை மீன் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் விநியோகித்தனர். மீறி விற்பனை செய்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதுபோன்ற பார்மலின் தடவிய மீன்களை சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகள் ஏற்படும் எனவும், தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் கூட உருவாக வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்களின் உடல்நலன் கருதி வியாபாரிகள் இதுபோன்ற ரசயானம் தடவிய மீன்களை விற்பனை செய்யக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Also see...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Coimbatore, Fish

    அடுத்த செய்தி