ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாஸ்டேக் முறையில் முறைகேடு! ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி மோசடியில் ஈடுபடுகிறதா?

பாஸ்டேக் முறையில் முறைகேடு! ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி மோசடியில் ஈடுபடுகிறதா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திட்டமிட்டு பாஸ்டாக் மூலம் கட்டணத்தை எடுத்துக்கொண்ட பிறகும் அதே வாகனத்தின் எண்ணை பயன்படுத்தி சில மணி நேரத்திற்கு பிறகு கட்டணத்தை மீண்டும் பதிவு செய்து பணத்தை எடுத்து வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் முறையில் பணம் செலுத்தும்போது தொடர்ச்சியாக முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

பாஸ்டாக் என்ற நவீன சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை ஜனவரி 15-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது. இருப்பினும், தொடர்ச்சியாக பாஸ்டாக் குறித்த சந்தேகங்களும் முறைகேடுகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேரடியாக பணம் செலுத்தி சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது நடைபெறாத முறைகேடுகள், தற்போது நவீன முறையில் கட்டணம் செலுத்தும் பொழுது நடைபெற்று வருகிறது.

கடந்த 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியை சரவணன் என்ற ஓட்டுநர் காலை 4 மணி அளவில் கடந்து சென்றுள்ளார். அப்பொழுது பாஸ்டாக் மூலம் அவருடைய கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் தொடர்ந்து பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம் தாண்டி சென்றுள்ளார். அப்பொழுது அதே ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடியில் இருந்து மற்றொரு குறுந்தகவல் வந்துள்ளது. அதனை படித்த பிறகுதான் தெரிந்தது மீண்டும் அவரின் வாகன எண்ணை பயன்படுத்தி கட்டணம் வசூல் செய்தது அம்பலமாகியுள்ளது.

இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு தொடர்பு கொள்ள ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி இணையதளத்தை ஆய்வு செய்தபோது அந்த சுங்கச்சாவடியில் தொலைத்தொடர்பு எண்கள் போன்ற எந்த எண்களும் இல்லாததால் பாஸ்டாக் அப்ளிகேஷன் உள்ளே சென்று இந்த புகாரை அளித்துள்ளார்.

ஆனால் கடந்த ஒரு வாரமாக அவருக்கு எந்த ஒரு விவரங்களும் கிடைக்காமல் தான் கட்டிய கட்டணமும் திரும்ப பெற முடியாததால் நேரடியாக ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது பாதிக்கப்பட்ட சரவணனுக்கு உரிய விளக்கத்தை தராமல் கிளம்பி போகும்படி கூறியுள்ளனர்.

அதன்பிறகுதான் தொடர்ச்சியாக ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருவதாகவும், திட்டமிட்டு பாஸ்டாக் மூலம் கட்டணத்தை எடுத்துக்கொண்ட பிறகும் அதே வாகனத்தின் எண்ணை பயன்படுத்தி சில மணி நேரத்திற்கு பிறகு கட்டணத்தை மீண்டும் பதிவு செய்து பணத்தை எடுத்து வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது. அவரைப் போல இதே புகாரோடு பலரும் அங்கே வந்துள்ளனர். ஆனால் யாருக்கும் உரிய பதில் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரி பவன் குமாரிடம் நேரடியாக நமது செய்தியாளர் குழு சென்று விளக்கம் கேட்டதற்கு பேட்டி அளிக்க மறுத்த அவர், இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அலுவலர்களை தொடர்பு கொண்டு விசாரித்து விரைவில் சொல்வதாகும் தெரிவித்தார். அதேபோல பாஸ்டாக் மூலம் முறைகேடுகள் ஏற்படும்போது புகார் அளிக்க தனிப்பட்ட எண் எதுவும் கிடையாது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: Fastag, Toll gate