• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வனப்பகுதிக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை - வனத்துறை அமைச்சர்

வனப்பகுதிக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை - வனத்துறை அமைச்சர்

குன்னூர் ராமச்சந்திரன்

குன்னூர் ராமச்சந்திரன்

2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 162.55 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு வனப் பகுதிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு

  • Share this:
வனப்பகுதிக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் குன்னூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பத்தாண்டுகளாக வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். இதற்கு வனத்துறை அமைச்சர் குன்னூர் ராமச்சந்திரன் பதில் அளித்து பேசினார்.

அப்போது, வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழு மூலம் மண்டல மாநில அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 162.55 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு வனப் பகுதிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 5109 ஹெக்டார் வனப் பகுதிக்கு சொந்தமான நிலங்களை கடந்த 40 ஆண்டுகாலமாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர் இதனை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வடபகுதிக்கு சொந்தமான நிலங்களை பயன்படுத்திய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாற்று நிலம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.” என்று தெரிவித்தார்.

Must Read : புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிட விவகாரம் : ஓ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் - இ.பரந்தாமன்

மேலும், மண்டல, மாநில அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருவதாகவும் தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கியிருக்கும் செயல் திட்ட அறிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும் கூறிய அமைச்சர் கராமச்சந்திரன், அதே போல புலம் பெயர்ந்து வந்துள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த்துறை சார்பாக வேறு நிலங்கள் ஒதுக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: