• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோயம்புத்தூரில் தாயைப் பிரிந்த குட்டியானை! காட்டுக்குள் கொண்டு விட்ட வனத்துறையினர்

கோயம்புத்தூரில் தாயைப் பிரிந்த குட்டியானை! காட்டுக்குள் கொண்டு விட்ட வனத்துறையினர்

கோப்புப்படம்

கோப்புப்படம்

இந்தநிலையில், நேற்றைக்கு முந்தைய நாள் இரவு மேட்டுப்பாளையம் சுண்டப்பட்டி பிரிவு, குமரிக்காடு சரகப் பகுதியை ஒட்டியுள்ள நெல்லித்துறை- சின்ராஜ் என்பவரது தோட்டத்திற்குள் இரவில் யானைக் கூட்டம் நுழைந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைக்கூட்டத்தை பிரிந்து தவித்த ஒரு வயது குட்டி யானையை, வனத்துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி யானைக்கூட்டத்தோடு சேர்த்தனர்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப் பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் அவ்வப்போது யானைகள் வருவது வாடிக்கையாக இருந்துவருகிறது. இந்தநிலையில், நேற்றைக்கு முந்தைய நாள் இரவு மேட்டுப்பாளையம் சுண்டப்பட்டி பிரிவு, குமரிக்காடு சரகப் பகுதியை ஒட்டியுள்ள நெல்லித்துறை- சின்ராஜ் என்பவரது தோட்டத்திற்குள் இரவில் யானைக் கூட்டம் நுழைந்தது.

    அந்த யானைகள் நேற்று காலை வனப்பகுதிக்குள் திரும்பி சென்று விட்டது. ஆனால் அக்கூட்டத்தில் இருந்த சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை அகழியைக் கடந்து செல்லமுடியாமல், தோட்டத்திற்குள் அங்குமிங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த வனத்துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின், யானைக்குட்டியை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: