• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் யானை காப்பகங்கள் - அமைச்சர் அறிவிப்பு

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் யானை காப்பகங்கள் - அமைச்சர் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அகத்தியர் யானை காப்பகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சட்டப்பேரவையில் வனத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் எனக்கேட்டு கொண்டார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ராமச்சந்திரன், விலங்குகள் தாக்கி உயிரிழக்கும் வனஅலுவலர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகை பத்து லட்ச ரூபாயாக வழங்கப்படும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டதாகவும், ஆனால் ஒருவருக்கு கூட அந்த நிதியுதவி வழங்கப்படவில்லை என்றும் பேசினார்.

    டான்டீ உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் நஷ்டத்தில் செயல்பட்டதாகவும், அதனை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

    முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், தமிழ்நாட்டில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரநிலங்கள் இயக்கம் தொடங்குவதாகவும், புலிகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2017 மே மாத கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 2,761 யானைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 4 வன காப்பகங்களில் யானைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் மனிதர்களுக்கும், வன உயிரினங்களுக்கும் இடையேயான மோதலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், பயிர்சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: