Home /News /tamil-nadu /

பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து: இன்னும் 3 உடல்களை மீட்க வேண்டியுள்ளது - அமைச்சர் ராமச்சந்திரன்

பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து: இன்னும் 3 உடல்களை மீட்க வேண்டியுள்ளது - அமைச்சர் ராமச்சந்திரன்

ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் விபத்து

வனப்பகுதி என்பதால் அதிகம் பேர் மீட்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை.  14 பேர் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர். இதில் இன்னும் 3 உடல்களை மீட்க வேண்டி உள்ளது. . ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், அவரது குடும்பத்தினர் பயணித்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், 3 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட வேண்டி இருப்பதாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி உட்பட 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. விபத்துக்குள்ளான எம்ஐ 17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் கோவை மாவட்டம் சூலூர் விமானதளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் 10 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் செய்து ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்து தொடர்பாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் நியூஸ் 18 ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது. வனப்பகுதி என்பதால் அதிகம் பேர் மீட்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை.  14 பேர் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர்.

    இதில் இன்னும் 3 உடல்களை மீட்க வேண்டி உள்ளது. ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. அடர்த்தியான வனப்பகுதி என்பதால் மீட்பு நடவடிக்கை சிரமமாக உள்ளது என்று தெரிவித்தார். ஹெலிகாப்டர்  கூடுதலாக 20 அடி மேலே பறந்து விபத்து ஏற்பட்டிருந்தால் அருகில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Army Chief General Bipin Rawat, Helicopter, Helicopter Crash

    அடுத்த செய்தி