வனத்துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

குன்னூர் ராமச்சந்திரன்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்

 • Share this:
  வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் குன்னூர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

  வனத்துறை மீதான மானியக் கோரிக்கையின் போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார் இதற்கு வனத்துறை அமைச்சர் குன்னூர் ராமச்சந்திரன் பதில் அளித்து பேசியதாவது,

  வனத் துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் 1,119 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் பழங்குடியினர் வேட்டை தடுப்பு காவலர்கள் 56 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது
  மேலும் மீதமுள்ள 1063 நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் விரைவில் பணி நிரந்தர ஆனை வழங்கப்படும்.

  மேலும் சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட குளத்தில் முதலைகள் இருப்பதாகவும் அம்முதலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அங்குள்ள முதலைகளை அப்புறப்படுத்தி சாத்தனூர் முதலைப் பண்ணைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப சிதம்பரத்தில் முதலை பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Arun
  First published: