• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • யானை படங்களுடன் கூடிய டிசர்ட் விற்பனையில் கோவை மாவட்ட வனத்துறை

யானை படங்களுடன் கூடிய டிசர்ட் விற்பனையில் கோவை மாவட்ட வனத்துறை

டிசர்ட் விற்பனையைத் தொடங்கிய வனத்துறை அமைச்சர்

டிசர்ட் விற்பனையைத் தொடங்கிய வனத்துறை அமைச்சர்

யானை படங்களுடன் கூடிய டி-சர்ட் விற்பனையை வனத்துறை தொடங்கியுள்ளது.

  • Share this:
கோவை மாவட்ட வனத்துறை தனியார் நிறுவனத்துடன் இணைந்து யானைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆசிய, ஆப்பிரிக்க யானைகள் படங்களுடன் கூடிய டி - சர்ட் விற்பனையை துவங்கியுள்ளது.

யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட வன வளர்ச்சி முகமை மற்றும் "Classic Polo" என்ற டி சர்ட் தயாரிப்பு நிறுவனம் இணைந்து யானைகளின் படங்களுடன் கூடிய டி-சர்ட்டுகளை வடிவமைத்துள்ளது. பல்வேறு வண்ணங்களில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானை படங்களுடன் விழிப்புணர்வு வாசகங்களும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

டிசர்ட் மாடல்கள்


யானைகள் படங்களுடன் கூடிய தமிழில் வாசகங்கள் கொண்ட டி-சர்ட்களும் வடிவமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த விழிப்புணர்வு வாசகங்கள் மூலம் இளைஞர்களுக்கு, யானைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் டி சர்ட்டுகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இந்த டி-சர்ட்டுகளின் முதல் விற்பனையை  துவக்கி வைத்தார்.

திருப்பூரைச் சேர்ந்த "Classic Polo" நிறுவனம் இந்த டி-சர்ட்டுகளை தங்களுடைய தயாரிப்பு விலைக்கு மட்டுமே கோவை மாவட்ட வன வளர்ச்சி முகமைக்கு வழங்குகிறது. கோவை மாவட்ட வன வளர்ச்சி முகமை மூலம் இந்த டி சர்டுகள் அனைத்து வனத்துறை சுற்றுலா தலங்களிலும் விற்பனை செய்யப்பட இருக்கின்றது. இந்த டி-சர்ட்  விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் அனைத்தும் யானைகள் பாதுகாப்பிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கோவை மாவட்ட வன வளர்ச்சி முகமைக்கு வழங்கப்படுகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த டி-சர்ட் களை coimbatorewilderness.com என்ற  இணையதளம் வாயிலாக வாங்கிக்கொள்ளலாம். டி சர்ட் எங்கு கிடைக்கும் என்ற தகவல்களும் இந்த இணைய முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக இந்த டி சர்ட் விற்பனையானது கோவை மாவட்ட வன அலுவலகம், போளுவாம்பட்டிவனச்சரக அலுவலகம், காரமடை வனச்சரக அலுவலகம் ஆகிய இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: