சிம்புவின் 46-வது திரைப்படமாக ஈஸ்வரன் உருவாகி வருகிறது; திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜயதசமி அன்று, வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிம்பு தனது தோளில் பாம்புடன் இருப்பதுபோல் காட்சிகள் உள்ளன. முதலில் அதைப் பார்த்த பலரும் அது கிராபிக்ஸாக இருக்கலாம் என நினைத்தனர். இந்த நிலையில், வனப்பகுதி ஒன்றில், மரத்தின் மீதுள்ள பாம்பு ஒன்றை நடிகர் சிம்பு லாவகமாகப் பிடித்து சாக்குப் பைக்குள் போடுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் பாம்புகள் அனைத்தும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக உள்ள நிலையில் அவற்றை பிடிப்பது, தனி நபர்கள் வைத்திருப்பது வனத்துறை சட்டப்படி குற்றச் செயலாகும்.
அதனால், சிம்பு மீது, வனவிலங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை வேளச்சேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் புகாரளித்திருந்தனர். மேலும், இந்திய வனவிலங்குகள் நல வாரியத்திற்கும் இ மெயில் மூலம் புகாரளித்திருந்தனர்.
இதையடுத்து ஈஸ்வரன் படத்தின் இயக்குநர் இதுகுறித்து வெளியிட்ட விளக்கத்தில், சிம்பு பிடித்தது பிளாஸ்டிக் பாம்பு என்றும் அது படத்தில் கிராபிக்ஸ் மூலம் உண்மையான பாம்பு போல் சித்திரிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் வனத்துறை அலுவலரிடம் இதுகுறித்து தாங்கள் அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி கடந்த வாரம் ஈஸ்வரன் படக்குழுவுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் படக்குழுவினர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், வியாழக்கிழமை இரண்டாவது முறையாக வனத்துறை அதிகாரிகள் சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்புவின் வீட்டிற்கு சென்று நேரடியாக நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இந்த நோட்டீசுக்கும் பதில் வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படு்ம் என வனத்துறையினர் தெரிவித்துள்னளர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Eeswaran Movie, Simbu