• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகம் முழுவதும் 33 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டம் - வனத்துறை தகவல்

தமிழகம் முழுவதும் 33 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டம் - வனத்துறை தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், பசுமை அளவை அதிகரிக்கும் வனத்துறை திட்டமிட்டுவருகிறது.

  • Share this:
தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கும் நடவடிக்கையாக 33 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டம் வகுத்து வருவதாக தமிழக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு தமிழகத்தின் தனிச் சிறப்புமிக்க இயற்கை வளங்களையும், பறவைகளையும், வன உயிர்களையும் பாதுகாப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மொத்த நிலப்பகுதியில் குறைந்தபட்சம் 33% காடுகள் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை செயல்படுத்த வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடத்தில் விசாரித்ததில், ‘2019 கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 26,364 சதுர கி.மீ பரப்பளவில் 20.27% காடுகள் உள்ளதாகவும், காடுகளுக்கு வெளியே 13,605 ச.கி.மீ பரப்பளவில் மரங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீதமுள்ள 13% அளவிற்கு காடுகள் பரப்பளவை அதிகரிக்கும் நடவடிக்கையாக 33 கோடி மரங்கள் நடவுள்ளதாகவும் விரைவில் இந்த திட்டத்துக்கான நிதி மற்றும் செயல்திட்டத்தை வகுத்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: