Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மிரட்டும் கொரோனா.. ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

மிரட்டும் கொரோனா.. ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

சர்வதேச விமான பயணிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவது தீவிரம் காட்ட, முடிவெடுக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளை கோவிட் பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், பரிசோதனைக்கு உட்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்க கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.

இதனிடையே, கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சர்வதேச விமான பயணிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவது தீவிரம் காட்ட, முடிவெடுக்கப்பட்டது.

அதேபோல் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளை கோவிட் பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில், வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும் போது பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும். அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

First published:

Tags: CM MK Stalin, Corona, COVID-19 Test