ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தினகரன் மீதான வழக்கு.. அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தினகரன் மீதான வழக்கு.. அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

டிடிவி தினகரன்.

டிடிவி தினகரன்.

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

டி.டி.வி.தினகரன் இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக முதலீடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன.இதனைதொடர்ந்து அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்க அமலக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில், டி.டி.வி. தினகரனுக்கு ஆவணங்களை வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலக்கத்துறையின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆவணங்களில் உள்ள தகவல்களை தாங்கள் பார்க்க விரும்புவதாக கூறினர். எனவே வழக்கின் விசாரணை தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் மூன்று வாரத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

First published:

Tags: Enforcement Directorate, Supreme court, TTV Dhinakaran