• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் உள்ள ஃபோர்டு கார் ஆலை மூடல்? 2000 ஊழியர்கள் கலக்கம்

சென்னையில் உள்ள ஃபோர்டு கார் ஆலை மூடல்? 2000 ஊழியர்கள் கலக்கம்

சென்னையில் உள்ள ஃபேர்டு கார் ஆலை மூடல்?

சென்னையில் உள்ள ஃபேர்டு கார் ஆலை மூடல்?

கடந்த 10 ஆண்டுகளில் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • Share this:
    சென்னை மறைமலைநகரில் உள்ள ஆலை உள்பட ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலைகளை மூட அந்நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் பல்வேறு வகையான வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

    தமிழ்நாட்டில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் கார் உள்ளிட்ட வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்த ஆலைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும்,

    கடந்த 10 ஆண்டுகளில் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவில் உள்ள இரண்டு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஆலைகள் மூடப்பட்டன.

    Also Read : கருணாநிதி பேச்சை மேற்கோள் காட்டி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பதிலளித்த பழனிசாமி

    தற்போது இந்தியாவிலும் தொழிற்சாலைகளை மூடுவதால் 4,000 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஃபோர்டு சென்னை மறைமலைநகர் ஆலை வட்டாரத்தில் கேட்டபோது, 2022 ஆம் ஆண்டு ஆலைகள் மூடப்படலாம் என்றும், ஆனால் தொழிலாளர்கள் வேலையிழக்காத வண்ணம் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.

    சென்னை ஃபேர்டு நிறுவனத்தில் மட்டும் 2000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இனி இறக்குமதி செய்யப்பட்ட ஃபோர்டு வாகனங்களின் விற்பனை மட்டும் இந்தியால் தொடரும் என அந்நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: