மத்திய அரசை ‘பாரத பேரரசு’ என்று அழைப்போம்: நடிகை குஷ்பு

குஷ்பு

‘ஒன்றிய அரசு’ விவகாரம், திமுக மற்றும் பாஜக தலைவர்களிடையே மோதல் போக்கையும் உருவாக்கியிருக்கிறது.

 • Share this:
  தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி தான் என பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

  கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகள் மத்திய அரசை (மத்திய அரசு) என்று தான் குறிப்பிட்டு வருகின்றன. இந்நிலையில், அண்மையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் வெளியிடும் அனைத்து அறிக்கைகளிலும் மத்திய அரசை, ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து, அனைத்து திமுக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், திமுகவினரும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகின்றனர்.

  Also read: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்: விளாசும் பாஜகவின் நிர்மல் குமார்!

  அதே நேரத்தில், ஒன்றிய அரசு என்ற இந்த சொல்லாடல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் இதில் உள்நோக்கம் இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்த பின்னர் வேண்டுமென்றே பிரிவிணைவாதத்தை திமுக கையிலெடுத்திருக்கிறது என தமிழக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்படி, பல விவாதங்களுக்கு வித்திட்டுள்ள ‘ஒன்றிய அரசு’ விவகாரம், திமுக மற்றும் பாஜக தலைவர்களிடையே மோதல் போக்கையும் உருவாக்கியிருக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது,

  மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறவர்கள், மத்திய அரசின் ஒரு பகுதியாக இருந்து அதிகபட்ச நலன்களை பெற்றவர்கள் தான். துரதிர்ஷ்டவசமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் இருந்து நாட்டை ஆட்சி செய்தவர்களும் இப்படி அழைக்கிறார்கள்.

  தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைத்தால், நாம் பாரத பேரரசு என்று அழைப்போம், என பதிவிட்டுள்ளார்.

  மேலும் தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே.. வாழ்க பாரத தேசம் வாழ்க தமிழகம் என கூறியுள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: