முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதல்முறையாக இனவாரியாக கால்நடைகள் கணக்கெடுப்பு

முதல்முறையாக இனவாரியாக கால்நடைகள் கணக்கெடுப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் முதல் முறையாக கால்நடை கணக்கெடுப்பு இனவாரியாக நடைபெறவுள்ளது. இப்பணியில் கால்நடைத்துறையைச் சேர்ந்த 4600-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபடவுள்ளனர். 

நாடு முழுவதும் கால்நடைகள் கணக்கெடுப்பு அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில், கால்நடை பராமரிப்புத்துறையைச் சேர்ந்த 4600-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், அதிகாரிகளும் இப்பணியை மேற்கொள்ளவுள்ளனர்.

இப்பணிக்காக நவீன டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. கால்நடைத்துறை ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகளின் கணக்கெடுப்பை மேற்கொள்வார்கள். அவற்றை டேப்லெட்டிலும் படம் பிடித்து ஆவணம் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கால்நடைத் துறை வரலாற்றில் முதல் முறையாக, இன வாரியாக கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதன் மூலம், கால்நடைகளின் பெருக்கம், வீழ்ச்சி போன்ற தகவல்களை முழுமையாக அறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என கால்நடை துறையினர் கூறுகின்றனர். மேலும் இதனுடன் கால்நடை உரிமையாளர்களின் வீடுகளில் உள்ள விவசாய உபகரணங்களும் கணக்கெடுக்கப்படவுள்ளது.

இப்பணிக்கென, தேசிய தகவல் மையம் பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது. அந்த செயலியில் கணக்கெடுப்பு தகவல் பதிவேற்றம் செய்ததும் மத்திய அரசின் தகவல் சேமிப்பு தளத்திற்கு அந்த விவரங்கள் சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cattle census, October to december, Tamilnadu