• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் முதல் முறையாக போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்கு மோப்பநாய்கள்

தமிழகத்தில் முதல் முறையாக போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்கு மோப்பநாய்கள்

மோப்ப நாய்

மோப்ப நாய்

தமிழகத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினருக்கு மோப்ப நாய்களை வழங்க, மூன்று லேபரடார் நாய்குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

  • Share this:
தமிழகத்தில் முதல் முறையாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கண்டறிவதற்கு என பிரத்யேகமாக  நாய்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு 3 லேபரடார் நாய்குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. சில மாதங்களில் இந்த நாய்குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட காவல்துறையிலும் மோப்பநாய் பிரிவானது செயல்பட்டு வருகின்றது.  இந்த மோப்பநாய்களை கொண்டு வெடிபொருட்களை கண்டறிதல், கொலை, திருட்டு போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிய பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் போதை பொருட்களை கண்டறிவதற்கு மோப்பநாய்கள் இல்லாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் செயல்படும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினருக்கு மோப்ப நாய்களை வழங்க தமிழக காவல் துறை முடிவுசெய்துள்ளது. இதற்காக மூன்று லேபரடார் நாய்குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட நாய்குட்டிகள் தற்போது கோவை காவல்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. கோவை அலுவலகத்திற்கு வாங்கப்பட்ட நாய்குட்டிக்கு டைகர் எனவும், மதுரை அலுவலகத்திற்கு வாங்கப்பட்ட நாய்குட்டிக்கு பாண்டி எனவும், திருச்சி அலுவலகத்திற்கு வாங்கப்பட்ட நாய்குட்டிக்கு  பாண்ட் எனவும்  பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இவற்றை பராமரிக்க தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாதங்களில் இவற்றிக்கு பயிற்சியானது துவங்கப்பட இருக்கின்றது. இரண்டு மாதங்களே ஆன நாய்குட்டிகளாக இவை 9 மாதங்களாகும் போது கோவை மாநகர காவல் துறையில் உள்ள துப்பறியும் நாய்கள் பயிற்சி மையத்தில், போதை மருந்துகளை கண்டறிவதற்காக பயிற்சிகள்  அளிக்கப்பட இருக்கின்றது. பயிற்சி முடிந்ததும் இவை போதை பொருட்கள் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தபடும்.

Must Read : கிராமத்து மாணவியை சந்திக்க கார் அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்

சமீபகாலமாக ரயில்கள் மூலம் கஞ்சா கடத்துவது அதிகரித்து வரும் நிலையில் அவற்றை கண்டறிவதற்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்படும் இந்த மோப்பநாய்கள் உதவியாக இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்தனர். தமிழக காவல் துறையில் போதை பொருட்களை கண்டறிவதற்கு என நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுவது முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: