வாக்காளர் அடையாள அட்டை கையில் இல்லையா? இந்த ஆவணங்கள் இருந்தால் நீங்கள் ஓட்டு போடலாம்!

கோப்புப் படம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிப்பதற்கு வேறு எந்தெந்த ஆவணங்களை கொண்டு செல்லாம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிப்பதற்கு வேறு எந்தெந்த ஆவணங்களை கொண்டு செல்லாம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

    தமிழகம் மற்றம் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. வாக்குப் பதிவின்போது, வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க இயலாத வாக்காளர்கள் கீழ்கண்ட ஆவண அடையாள அட்டைகளில், ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.

    அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்குப் புத்தகம், அஞ்சலகக் கணக்குப் புத்தகம், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.

    பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றறைக் காட்டி வாக்களிக்கலாம். அத்துடன், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 20-ஏ பிரிவின்கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் விசாவைக் காண்பித்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.

    இந்நிலையில், “காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்காளர்கள், பூத் முகவர்கள் தங்களின் அலைபேசிகளை வாக்குச்சாவடிக்குள் கொண்டு வரக்கூடாது. கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக, வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும்.

    Must Read :  தமிழகத்தில் இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவும் : வானிலை மையம் எச்சரிக்கை

     

    தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை முடிந்த பின்னரே, வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன், வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் ஒரு கைக்கு மட்டும் கையுறை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: