முகப்பு /செய்தி /தமிழ்நாடு / செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு...

செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு...

செவ்வாய் தோஷத்தால் திருமண தடை ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

செவ்வாய் தோஷத்தால் திருமண தடை ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

செவ்வாய் தோஷத்தால் திருமண தடை ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

 • 2-MIN READ
 • Last Updated :

  மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவார். கடகத்தில் நீச்சம் பெறுவார். சிம்மம் மற்றும் மகர ராசிக்கு செவ்வாய் யோகத்தை செய்யக் கூடிய கிரகம் ஆவார். செவ்வாய்க்கு உரிய எண் 9. செவ்வாய்க்கு உரிய தெய்வம் சுப்பிரமணியர். அதனால் செவ்வாய் அன்று முருகனை வழிபடுதல் சிறப்பு...

  விரதம் இருக்கும் முறை

  செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையிலேயே நீராடி, அருகில் இருக்கும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை தொடங்க வேண்டும். பின் வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து முருகனை நினைத்து சஷ்டி கவசம், கந்தகுரு கவசம் போன்ற முருகப் பெருமானுக்கு உரிய தோத்திரங்கள் மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். அதன்பின் மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

  கிடைக்கும் பலன்கள்

  தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் விரதமிருந்து முருகனை உளமாற வழிபடுவதால், உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மை உண்டாகும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும். கோழைத்தனம், பய உணர்வுகள் நீங்கி, தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

  செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய அங்காரகனுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  ஓம் வீரத்வஜாய வித்மஹே

  விக்ன ஹஸ்தாய தீமஹி

  தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

  ஓம் அங்காரகாய வித்மஹே

  சக்திஹஸ்தாய தீமஹி

  தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

  ஓம் அங்காரகாய வித்மஹே

  சக்திஹஸ்தாய தீமஹி

  தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

  ஓம் லோஹிதாங்காய வித்மஹே

  பூமிபுத்ராய தீமஹி

  தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

  திருமண தடை

  செவ்வாய் தோஷத்தால் திருமண தடை ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும். தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் நவகிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமி, தன்வந்திரி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

  பரிகாரம்

  செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து அரசமரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதரை வழிபட்டு ஆலமரத்தை சுற்றி வரவேண்டும். வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செவ்வாய்க்கு அதி தேவதையான முருகப்பெருமானை வழிபடவேண்டும். அங்காரகன் சன்னதியில் உள்ள அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்ய தடைகள் நீங்கும்.

  முருகன்

  யாருக்கெல்லாம் செவ்வாய் தோஷம் கிடையாது 

  மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் கிடையாது. மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து, அது 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றாக வந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது. சூரியன், புதன், குரு, சனி, ராகு, கேது முதலிய கிரகங்களில் ஏதோ ஒன்றுடன் செவ்வாய் இணைந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலோ தோஷம் இல்லை. செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி, லக்கினத்திற்கு கேந்திரத்திலோ (1, 4, 7, 10) அல்லது திரிகோணத்திலோ (5, 9) இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

  மேலும் படிக்க... செவ்வாய் எம்மாதிரியான யோக பலனை அளிப்பார் தெரியுமா?           

  செவ்வாய் மற்ற கிரகங்களுடன் பரிவர்த்தனையில் இருந்தாலும் தோஷமில்லை. அதாவது செவ்வாயின் சொந்த வீடுகளாகிய மேஷம், விருச்சிகத்தில் ஏதேனும் கிரகங்கள் அமர்ந்திருக்க, அந்த கிரகத்தின் வீட்டில் செவ்வாய் இருப்பது பரிவர்த்தனை எனப்படும். உதாரணத்திற்கு சனி விருச்சிகத்தில் இருக்க, செவ்வாய் கும்பத்தில் இருப்பது பரிவர்த்தனை யோகமாகும். இந்த ஐந்து விதிவிலக்குகளையும் வைத்துக்கொண்டு உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா, இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்.

  மேலும் படிக்க... செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடையாகுமா?

  செவ்வாய் கிழமையில் நல்ல விஷயங்களை செய்யலாமா?

  ஆடி செவ்வாய் விரதமும் வழிபாடு பலன்களும்

  திருமண வரம் தரும் ஆடி செவ்வாய் வழிபாடு!

  ஆடி செவ்வாயில் அம்மாயி கொழுக்கட்டை செய்து வணங்குதல் நல்லது... யார் இந்த அம்மாயி தெரியுமா?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  First published: