ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி.. ரூ.2 கோடி நஷ்ட ஈடு" - அண்ணாமலை ட்வீட்!

"தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி.. ரூ.2 கோடி நஷ்ட ஈடு" - அண்ணாமலை ட்வீட்!

அண்ணாமலை

அண்ணாமலை

தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

  சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

  மேலும், தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Annamalai, BJP