ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவையில் வீடுகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்ட கலப்பட நெய் பறிமுதல்....

கோவையில் வீடுகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்ட கலப்பட நெய் பறிமுதல்....

பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட நெய்

பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட நெய்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கோவை குனியமுத்தூர் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் வீடுகளில் தயாரிக்கப்பட்ட  100 கிலோ கலப்பட நெய்யை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நெய்யின்  மதிப்பு 30 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை நகரின் பல்வேறு இடங்களில் கலப்பட நெய் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல்  கிடைத்தது. இதனையடுத்து கோவை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில் குனியமுத்தூர் பகுதியில் உள்ள வெத்தலக்கார வீதி, அன்னம்மாநாயக்கம் சந்து, மாரியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த சில கடை மற்றும் வீடுகளில்  பாமாயில், டால்டா ஆகியவற்றை கொண்டு கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. மேலும் சந்தையில் விற்பனையாகும் பிரபல  நெய் பாட்டில்கள் பெயரிலிலும் போலியாக கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்து வந்ததும்  தெரியவந்தது.

இதையடுத்து கலப்பட  நெய்யை தயாரித்த அம்சா , ராஜேஷ்வரி, ராஜாமணி, கலா, முனிஸ்கா, அழகுபாண்டி, ராஜேஷ்வரி, முத்துரகு ஆகியோரின் விவரங்களை பதிவு செய்த அதிகாரிகள் இவர்களை மாவட்ட தீர்ப்பு அலுவலர் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக  உத்திரவிட்டுள்ளனர்.

இவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும்  தர நிர்ணயசட்டம்  2006ல் , பிரிவுகள் 55 மற்றும் 58-ன்படி வாக்குப்பதிவு செய்ய அதிகாரிகள், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Also see...

First published:

Tags: Adulteration