சிறுமி உயிரிழப்பு எதிரொலி: குளிர்பான நிறுவனத்துக்கு சீல்!

குளிர்பான நிறுவனத்துக்கு சீல்

சிறுமி குடித்த குளிர்பானம் 17 பாட்டில்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவற்றின் விற்பனையை தடுத்து அவற்றை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர்.

 • Share this:
  சென்னையில் குளிர்பானம் அருந்தியதை தொடர்ந்து  உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறுமி உயிரிழந்தார். இதன் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குளிர்பான தயாரிப்பு நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

  சென்னை பெசண்ட் நகர் ஓடைகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் கல்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை திருமணம் செய்து கல்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக காயத்ரி தனது இரண்டு மகள்களான தரணி (வயது 13) மற்றும் அஷ்வினி( வயது 16) ஆகியோருடன்  பெசன்ட் நகர் ஓடை குப்பம் பகுதியில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்கு வந்து பெசன்ட்நகர் வேளாங்கண்ணி சர்ச்சில் மொட்டையடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், சிறுமி தரணி ட்டின் அருகில் இருந்த மளிகை கடையில் ரூ 10 மதிப்பு கொண்ட Togito Cola என்ற குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்த சிறுமி, வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலும் நீல நிறத்துக்கு மாறியதாக கூறப்படுகிறது.


  மேலும் படிக்க: அங்கன்வாடிகளை திறக்க தமிழக அரசு முடிவு - மாணவர்களுக்கு வீடுதேடி சத்துணவு!


  சிறுமியின் இறப்புக்கு அவர் அருந்திய குளிர்பானம் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, குறிப்பிட்ட கடையில்  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  சிறுமி குடித்த குளிர்பானம் 17 பாட்டில்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவற்றின் விற்பனையை தடுத்து அவற்றை கைப்பற்றினர்.  சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஆத்தூர் கிராமத்தில் அமைந்த அக்க்ஷயா ஃபுட் ப்ராடக்ட்ஸ் குளிர்பான கம்பெனியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மூடி சீல் வைத்தனர். பரிசோதனையின் மாதிரிகள் முடிவு தெரியும்வரை குளிர்பான கம்பெனியை மூடி வைக்க உத்தரவிட்டு சென்றனர்.

  இதையும் படிக்க: சைலண்ட் மோடில் அதிமுக... புகுந்து விளையாடும் பாஜக, அமமுக!

  Published by:Murugesh M
  First published: