நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் உறுதி

நெல் வளர்ச்சி தேவையை கருத்தில் கொண்டு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும் உரக்கிடங்கு அமைப்பது பற்றி கூட்டுறவுத் துறை அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் உறுதி
உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
  • News18
  • Last Updated: July 19, 2019, 12:13 PM IST
  • Share this:
விவசாயிகளின் நலன் கருதி நெல் வளர்ச்சி தேவையை கருத்திற்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் தொகுதியில் உள்ள மேலமாங்காவனம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையையும் உரகிடங்கு அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் காமராஜ் தமிழகத்தில் 1866 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுஉள்ளதாகவும் இதன் மூலம் 4,28,000 விவசாயிகள் பயன் அடைந்து உள்ளதாகவும் கூறினார் .


மேலும், நெல் வளர்ச்சி தேவையை கருத்தில் கொண்டு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும் உரக்கிடங்கு அமைப்பது பற்றி கூட்டுறவுத் துறை அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Also see...

First published: July 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading