சீன அதிபர் தமிழகம் வந்தபோது வரவேற்ற நாட்டுப்புற கலைஞர்கள்.... இப்போது என்ன செய்கிறார்கள்?
சித்திரை, பங்குனி உள்ளிட்ட ஒரு சில மாதங்களில் தான் அவர்களின் மொத்த வருடத்திற்கான வருமானம் கிடைக்கும்.

நாட்டுப்புறக் கலைஞர்கள்
- News18 Tamil
- Last Updated: April 18, 2020, 11:22 AM IST
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பின் போது அவர்களை மகிழ்விப்பதற்காக இசைத்து ஆடிய நாட்டுப்புறக் கலைஞர்கள் ஊரடங்கால் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமூக இடைவெளிக்கு சற்றும் சாத்தியமில்லாத சென்னை கே.கே.நகரில் உள்ள அம்பேத்கர் நகர் ஒரு அடர்ந்த குடிசை பகுதி. இரண்டு பேர் ஒட்டினார் போல நடந்து செல்வது கடினம் என்ற நிலையில் உள்ள மிகக் குறுகலான தெருக்கள் அவை.
அந்த தெருக்களுக்குள் சின்னஞ்சிறு வீடுகளுக்குள் வசித்துக் கொண்டிருந்தார்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள். 2019 அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்தார்கள். சென்னை விமான நிலையத்தில் அவர்கள் வந்திறங்கிய போது வரவேற்றதில் துவங்கி, மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை மகிழ்வித்தது, மீண்டும் அவர்களை ஆடிப்பாடி வழியனுப்பி வைத்தது வரை தமிழக நாட்டுப்புற கலைஞர்களின் பங்கு மிகப்பெரியது. 
அதில் பங்கேற்ற கலைஞர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவர்களை சந்தித்தோம். சுரமற்று இருந்த அவர்களது மேள கருவிகளில் தாளம் தட்டி விளையாடிக் கொண்டிருந்தன அவர்கள் வீட்டுக் குழந்தைகள்.
"பொங்கல், சித்திரை, ஆடி உள்ளிட்ட மாதங்களில் தான் நிறைய கலை நிகழ்ச்சிகள் நடக்கும். வரும் மே மாதம் சித்ரா பவுர்ணமி கூட வர உள்ளது. அதற்கு இப்போதே எங்களை முன்பதிவு செய்திருந்தார்கள். அதற்குள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விட்டது. இயல்பாகவே தொடர் வருமானம் இல்லாத நாங்கள், இப்போது மொத்தமாக 5 மாதங்களுக்கு மேலாக வேலை இல்லாமல் இருப்போம். இந்நிலையில் அரசு அளித்துள்ள 1000 ரூபாய் எங்களுக்கு மூன்று நாட்களுக்கு கூட போதாது" என்றார் கரகாட்ட கலைஞர் கார்த்தி.
மேலும் பேசிய அவர், "ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் 2000 ரூபாய் கிடைக்கும். மாதத்திற்கு அதிகபட்சமாக 10000 கிடைத்தால் பெரிது. அந்த நிலையில், அரசு சுற்றுலா கண்காட்சி தான் கடைசியாக நிகழ்ச்சி நடத்தியது. அதற்கு முன்னர் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பில் நிகழ்ச்சி நடத்தினோம்.
ஊரடங்கு காரணமாக, எங்கள் கலைஞர்கள் பலரும் இப்போது இரவு தூய்மை பணிகளுக்கும், மருத்துவமனை தூய்மை பணிகளுக்கும் செல்கின்றனர். ஏற்கனவே இந்த கலை நலிந்து வருகிறது. இதில் மேலும் இழப்பு ஏற்படும் போது, எங்களுக்கு கலை மீதே பெரும் வெறுப்பு ஏற்படுகிறது" என்று கண்கலங்க தெரிவித்தார்.

பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடிய கால்களால், இப்போது சிரமப்பட்டு நடந்து வந்து நம்மிடம் பேசினார் லட்சுமி. "சின்ன வயதில் எல்லா ஆட்டமும் ஆடிக் கொண்டிருந்தேன். பின் வயதானவுடன் பொய்க்கால் குதிரை ஆட்டம் மட்டும் ஆடினேன். 10 வருடங்களுக்கு முன்பு ஒரு ஆட்டத்தின் போது என் வலது கால் உடைந்து விட்டது. அதிலிருந்து என்னால் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியவில்லை. அதற்கு பிறகு, இப்போது இரண்டு மாதங்களாக மாநகராட்சியில் இரவு தூய்மை பணி செய்து வருகிறேன்.
இதன்மூலம் மாதம் 6000 வருமானம் வருகிறது. இப்போது எனக்கு 60 வயதாகி விட்டதால் இந்த வேலையில் இருந்தும் நிறுத்தப் போகிறார்கள். தினமும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், ஊரடங்கு நீடிக்க நீடிக்க என்ன செய்வது என்றே தெரியவில்லை" என்று சொல்லிக் கொண்டிருந்தவர், "உங்களிடம் சொல்வதற்கு என்ன... எனக்கு கால் உடைந்த பிறகு, மாடு சாணி போடுவது போல நின்று கொண்டு தான் மலம் கழிக்க முடிகிறது" என்று சொல்லி முடிக்கும் முன்னரே அவருக்கு வார்த்தைகள் திக்கி திணறி அழுது விட்டார். புடவையால் கண்களை துடைத்தபடி தன் பேச்சை முடித்துக் கொண்டார்.
"என் கணவர் மேளம் அடிப்பார், கரகாட்டம் ஆடுவார். நிகழ்ச்சிகள் இல்லாத போது ஆட்டோ ஒட்டுவார். இப்போது எதற்கும் வழியில்லாமல், கோயம்பேடு காய்கறி சந்தையில் மூட்டை தூக்க செல்கிறார்.அவருக்கு உடல்வலி தாங்க முடியவில்லை. இரவு 12 மணிக்கு சென்றால் மறுநாள் மதியம் 12 மணிக்கு வீடு திரும்புவார். 400 ரூபாய் கூலி கிடைக்கும்.
அதை வைத்து தான் இந்த நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.நான் வீட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன், இப்போது கொரோனா காரணமாக வீட்டு வேலைக்கும் வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது நீடித்தால் என்ன செய்வதென்று தெரியவில்லை" என்றார் துர்கா.
Also read... மங்கல இசைக் கலைஞர்களுக்கு ரூ.5000 நிதி வழங்கக் கோரிய மனு... ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க அரசிற்கு உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் மங்கள இசைக் கலைஞர்களுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க தொடரப்பட்ட வழக்கில் வாதாடும் வழக்கறிஞர் ராஜேஷ் பேசுகையில்,"தமிழகம் முழுவதும் 15,000 க்கும் மேற்பட்ட மங்கள இசைக் கலைஞர்கள் உள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால், அந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் பட்டியலில் இந்த இசைக் கலைஞர்கள் இல்லை.கோயில் விழாக்கள், திருமண நிகழ்வுகள், கச்சேரிகள் உள்ளிட்டவை மூலம் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்கள். சித்திரை, பங்குனி உள்ளிட்ட ஒரு சில மாதங்களில் தான் அவர்களின் மொத்த வருடத்திற்கான வருமானம் கிடைக்கும்.
இப்போது ஊரடங்கு காரணமாக அதுவும் இல்லை. எனவே, இவர்களின் குடும்பத்திற்கு தலா 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்கிற வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது குறித்து விளக்கமளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு நல்ல பதிலளிக்கும்" என்று நம்புவதாக தெரிவித்தார்.
ஊருக்காக ஆடிய கால்கள் இப்போது பெரும் ஓய்வு கொண்டிருக்கின்றன. பிறரை மகிழ்விக்க பாடிய நாவுகள் இன்று சுவை மறந்து தவிக்கின்றன. எல்லோரின் கலைப்பசிக்கும் உணவிட்டவர்கள் இன்று தங்களின் வயிற்றுப் பசிக்கு உணவின்றி கையேந்தி நிற்கின்றனர்.
Also see...