ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கடலூரில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.11 லட்சம் பறிமுதல்!

கடலூரில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.11 லட்சம் பறிமுதல்!

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

சென்னைக்கு பணத்தை எடுத்துச்சென்ற ஶ்ரீரங்கத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே எழுதூரில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வந்த ரூ.11.63 லட்சம் பறிமுதல் செய்தனர்.

  மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

  கடலூர் மாவட்டத்தில் 8 எல்லையோர சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

  மேலும் 18 பறக்கும் படை அதிகாரிகளும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த எழுத்தூர் கைகாட்டி அருகே நேற்று காலை 8மணியளவில் பறக்கும்படை அலுவலர் முகமதுஅசேன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் உள்ளிட்ட சோதனை மேற்கொண்டிருந்தனர்.

  அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்குமார் என்பவர் தனது மகன் ஆகாஷூடன் சென்னை நோக்கிச் சென்றதும், அவரிடம் உரிய ஆவணங்களின்றி 11.63 லட்சம் ரூபாய் எடுத்துச்சென்றதும் தெரியவந்தது.

  இதனை தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, ராஜேஷ் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Cuddalore, Elections 2019, Lok Sabha Election 2019