Home /News /tamil-nadu /

லஞ்சம் வாங்கிய பறக்கும் படை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

லஞ்சம் வாங்கிய பறக்கும் படை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு பறக்கும் படையினர் ஜெய்குகனை அழைத்து சென்று பாபுவிடம் 50,000 பணத்தை திருப்பி தர வேண்டுமென்றால் தங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
    சென்னையில் லஞ்சம் வாங்கிய பறக்கும் படை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை ஆவடியைச் சேர்ந்த ஜெய்குகன் கடந்த 30-ம் தேதி ஐ.சி.எஃப் பகுதியில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு மாநகராட்சி உதவி பொறியாளர் பாபு தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன், காவலர்கள் கார்த்திகேயன், வீரமணி ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஜெய்குகனிடமிருந்து 50,000 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு பறக்கும் படையினர் ஜெய்குகனை அழைத்துச் சென்று பாபுவிடம் 50,000 பணத்தை திருப்பி தர வேண்டுமென்றால் தங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    ஜெய்குகன் 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்துவிட்டு 50,000 ரூபாய் பணத்தை திரும்பபெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து இச்சம்பவம் குறித்து ஜெய்குகன் சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரகாஷிடம் புகார் அளித்தார்.

    புகாரை விசாரித்ததில் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதனை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு, காவல் உதவி ஆணையர் வாசுதேவன், காவலர்கள் கார்திகேயன் மற்றும் வீரமணி ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து பிரகாஷ் உத்தர்விட்டார்.

    Also see...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai, Corruption, Election Flying Squad, Elections 2019

    அடுத்த செய்தி