வாக்காளர்களுக்கு தலா ₹2000 பணப்பட்டுவாடா - பறக்கும்படையினரிடம் சிக்கிய அதிமுகவினர்...!

வாக்காளர்களுக்கு தலா ₹2000 பணப்பட்டுவாடா - பறக்கும்படையினரிடம் சிக்கிய அதிமுகவினர்...!

பறக்கும்படையினரிடம் சிக்கிய அதிமுகவினர்

சுக்கிரன்விடுதி பகுதியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கந்தர்வகோட்டை தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினரை, பறக்கும்படையினர் பணத்துடன் பிடித்தனர்.

  சுக்கிரன்விடுதி பகுதியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கந்தர்வகோட்டை தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

  சம்பவ இடத்திற்குச் சென்ற பறக்கும் படையினர், அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அதிமுகவைச் சேர்ந்த கண்ணன் என்கிற சசிகுமாரை பிடித்தனர்.

  Also read... கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் பார், திரையரங்குகள், வழிபாட்டு தலங்களை மூடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு...!

  அங்கு நின்றிருந்த எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சுலைமானின் காரில் இருந்து 26 கவர்களில் 52,000 ரூபாய் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு கவரிலும் தலா 2000 ரூபாய் வைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கண்ணன் மீது கரம்பக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: