ஓணம், வரலட்சுமி விரதம் காரணமாக, பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு

பூக்கள் விற்பனை

கேரளா பூ வியாபாரிகள் நேரடியாக வர முடியாத நிலையில், தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

 • Share this:
  வரலட்சுமி விரதம், ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்தம் என்பதால் சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது.

  இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு விலை அதிகரித்திருப்பதாகவும், உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இதேபோல, கன்னியாகுமரி மாவட்ட தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலையும் அதிகரித்துள்ளது. சுமார் 500 டண்க்கும் அதிகமாக வண்ண பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

  கொரோனா காரணமாக கேரளா பூ வியாபாரிகள் நேரடியாக வர முடியாத நிலையில், தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அதன்படி பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, வியாபாரிகள் இன்றி வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு எடுத்து செல்லப்படுகிறது.

  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ,  450 ரூபாய்க்கு விற்பனையான மல்லிப்பூ இன்று 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, கடந்ந இருதினங்களுக்கு முன்னர் 300 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ 1,100 ரூபாய்கு விற்பனையாகிறது.

  பூக்கோலம்


  கிரேந்தி பூ 90 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும்,  ஆரஞ்சு கிரேந்தி 120 ரூபாய், ரோஸ் 250 ரூபாய், செவ்வந்தி பூ 200 ரூபாயிலிருந்து, 350 ரூபாய் க்கும் விற்பனையாகிறது.

  இந்நிலையில், மதுரையில் 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மதுரை மல்லி இன்று 1,200க்கு விற்கப்பட்டு வருகிறது

  மதுரையில் இன்று, முல்லைப் பூ கிலோ 800 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 600 ரூபாய்க்கும் பட்டன் ரோஸ் ரூபாய் 200க்கும், செவ்வந்திப்பூ 150 ரூபாய்க்கும் அரளிப்பூ ரூபாய் 150, சம்பங்கி ரூபாய் 200, கோழிக்கொண்டை பூ ரூபாய் 100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  Must Read : வரலட்சுமி விரதத்தின் புராணக்கதை!

  கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் 60 கடைகளுடன் இயங்கி வரக்கூடிய மதுரை மலர் சந்தையில் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக பூ வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

  சென்னை கோயம்பேட்டில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:

  முன்னால் இருப்பது இரண்டு நட்களுக்கு முந்தைய விலை. பின்னல் இருப்பது இன்றைய விலை.
  ரோஜா கிலோ 70-160
  சம்பங்கி 120-300
  மல்லி 400 -1200
  அரளி 100-250
  முல்லை200-600
  பன்னீர் 40-150
  சாமந்தி 60-180

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதேபோல தமிழகம் முழுவதிலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
  Published by:Suresh V
  First published: