ரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு

ஆயுதபுஜையை முன்னிட்டு அலங்காரம் மற்றும் பூஜைக்காக பயன்படுத்தப்படும் பூக்கள் மற்றும் பூமாலைகள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளன.

ரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு
கோவை பூ மார்க்கெட்
  • Share this:
நவராத்திரி பூஜையின் இறுதி நாளான இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வெகுவிமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வரும் பண்டிகை என்பதால் பூஜை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பூக்கடை மொத்த வியாபாரம் கடைகள் கோயம்பேடு அடுத்துள்ள வானகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூஜைகள் மற்றும் அலங்காரத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான அளவிலேயே மக்கள் மார்க்கெட்டுக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் பூக்கள் மற்றும் பூமாலைகள் அலங்காரப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மேலும், கடந்த ஆண்டை விட குறைவான அளவிலேயே வியபாரம் நடப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு கிலோ ரூபாய் 400க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிப்பூ இன்று ரூபாய் 1,200 க்கு விற்கப்படுகிறது.

அதேபோல ஒரு வாரத்திற்கு முன்பு ரூபாய் 300 விற்கப்பட்ட காட்டுமல்லி இன்று ரூபாய் 700 லிருந்து 800 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ரூபாய் 30 க்கு விற்ற சாமந்திப்பூ இன்று கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல ரூபாய் 150 விற்கப்பட்ட ரோஜாப்பூ இன்று ரூபாய் 250 -300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தெய்வ வழிபாடு மற்றும் வாகன அலங்காரங்களுகாக பயன்படுத்தப்படும் பூமாலைகள் அதன் தரத்திற்கு ஏற்றவாறு விலை ஏற்ற பட்டுள்ளதாக பூமாலை வியாபாரிகளும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading