உதகை பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்..!

உதகை பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்..!
  • Share this:
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் குதூகலித்து வருகின்றனர்.

சர்வதேச சுற்றுலாத்தளமான உதகையில் இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசிக்கவும், அங்கு நிலவும் இதமான சூழலை அனுபவிக்கவும் ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் பசுமை போர்த்திய புல்வெளிகளும், பூத்துக்குலுங்கும் மலர்களும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக குறிப்பிட்ட வெப்ப நிலையில் வளரக்கூடிய தாவரங்கள், மலர்செடிகளை வளர்ப்பதற்காக பிரத்யேகமாக மூன்று கண்ணாடி மாளிகைகள் அமைக்கப்பட்டன.

போதிய பராமரிப்பில்லாமல் இரண்டு கண்ணாடி மாளிகைகள் மூடப்பட்ட நிலையில், 20 கோடி ரூபாய் செலவில் அவை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டன. தற்போது இந்தக் கண்ணாடி மாளிகை முழுவதும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன.


கண்ணாடி மாளிகையில் ஊடுருவும் சூரிய ஒளியில், பெட்டுனியா, ஜெர்புரா, கள்ளிச் செடிகள், பிக்கோனியா, லுபின், கேளம்பிளா, பால்சம் உள்ளிட்ட மலர்கள் சிவப்பு, நீலம், ஊதா, மஞ்சள் என பலவித வண்ணங்களில் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பூங்காவில் மலர்கள் இல்லாத சூழலிலும், கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள வண்ண மலர்களை சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து ரசிப்பதுடன், செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Also see:

 
First published: February 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading