உதகை மலர் கண்காட்சியை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யாரென இன்று இறுதி செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, வரும் 22ம் தேதி முதல் 15 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு.
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6வது நபரை தேடும் பணி, ஆறாவது நாளாக தொடர்கிறது.
ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கூட்டாட்சி தத்துவத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பாடம் புகட்டி இருப்பதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு, தற்போதுள்ள ஜிஎஸ்டி வரம்பை மாற்றாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 விழுக்காடாக இருக்கும் என்று ஐநா கணித்துள்ளது.
கேரளாவில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து உள்ளது.
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளியை ஆதரித்த திமுகவுடன் கூட்டணி வேண்டாம் எனக்கூறி காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத்தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.
பாலியல் வழக்கில் ஜாமினில் உள்ள சிவசங்கர்பாபாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் பள்ளி மாணவிகள் நான்கு பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு உதயநிதி ஸ்டாலின் தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 5G தொழில்நுட்பத்தின் சோதனை சென்னை ஐஐடி வளாகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் ஆன புகைபிடிப்பான் கண்டறியப்பட்டுள்ளது.
பேரறிவாளனைப்போல் சிறை தண்டனையில் இருந்து விடுதலை ஆவதற்காக போராடுவோம் என ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக தேனீக்கள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த சிறுவன் தனது உடலில், தேனீக்களை பரவவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினான்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கொப்புடையம்மன் கோயில் தெப்பத் தெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக, குடியாத்தம் திரையரங்கில் இரவு முதலே ரசிகர்கள் குவிந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழகத்தில் உள்ள எழும்பூர், காட்பாடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை ரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மறுசீரமைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு.
இலங்கையில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தங்களது விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தோனேசியா நாட்டில் பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, வரும் 23ம் தேதி முதல் நீக்கப்படுகிறது.
Must Read : திமுகவுக்கு மண்டியிட்டு பழக்கம் இல்லை.. மாநிலத்தின் உரிமைகளை காக்க போராடுகிறோம்.. - திருச்சி சிவா
வட கொரியாவில் 20 லட்சம் பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறவியிலேயே கேட்கும் திறன் குறைபாடுடன் பிறந்த மதுரை மாணவி, டெஃப்லிம்பிக் (Deaflympics) பேட்மிண்டன் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் உத்தரபிரதேசம்,சண்டிகர் மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் வெற்றி.
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் நிகாத் சரீன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஐபிஎல்-லில் குஜராத்திற்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.