தென்மாவட்டங்களில் தொடரும் மழை: தாமிரபரணி ஆற்றில் 53,000 கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மாதிரிப் படம்

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 53,000 கனஅடி நீர் திறந்துவிடப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்து ஒரு வார காலத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்துவருகிறது. அதேபோல, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு வார காலத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்துவருகிறது. நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சேரன்மகாதேவி அருகே உள்ள சங்கன்திரடு கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி கிராம மக்கள் 400க்கும் மேற்பட்டவர்களை வருவாய்த்துறையினர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அழைத்து சென்றனர். உதவி ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய்த்துறையினர் கிராம மக்களை அழைத்துச் சென்றனர்.

  தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் புதியம்புத்தூர், புதுக்கோட்டை முள்ளக்காடு முத்தையாபுரம், திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் கல்யாண ஓடை பகுதியில் வாய்க்காலில் வேலை பார்க்கும் போது நீரில் மூழ்கி அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்தனர். கௌதம் வயது 10. தினேஷ் வயது 12.

  அறுந்து கிடந்த மின் வயர் வாய்க்காலில் விழுந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இறந்தவர்கள் இருவருமே மின்சாரம் தாக்கி இறந்து இருப்பதாக கூறப்படுகிறது.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 46 அடி கொள்ளளவு எட்டியதை தொடர்ந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

  புதுக்கோட்டை மாவட்டம் இலைகடிவிடுதி பகுதியில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மழைநீர் வடி நீர் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாத தால் விவசாய பகுதிக்குள் நீர் புகுந்து உள்ளது என விவசாயிகள் குற்றச்சாட்டு.

  திருநெல்வேலியில், பாபநாசம் அணையிலிருந்து 14,000 அடி கனநீரும், சேர்வலாறு அணையிலிருந்து, 7,616 கனஅடி நீரும், மணிமுத்தாறு அணையிலிருந்து 25,916 கனஅடி நீரும், கடனா அணையிலிருந்து 3,389 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது. மொத்தமாக தாமிரபரணி ஆற்றுக்கு 53,285 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

  அதனால், தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பூரில் திருமூர்த்தி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 59.60 அடி நீர் மட்டம் நீர் நிறைந்ததையடுத்து பாலாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  தென்காசி மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருவதினால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாலையோரங்களில் கரும்பு, பூ, காய்கறி கடை வியாபாரிகள் விற்பனை இல்லாமல் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் மிகுந்த நஷ்டம் அடைந்து உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

  சிவகங்கை மாவட்ட மானாமதுரை அருகே சன்னதி புதுகுளம், படைகுளம் உட்பட சுற்றி உள்ள கிராமங்களில் 3,000 ஏக்கர் தண்ணீரில் மூழ்கியது. அதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: