நீரில் சிக்கியவர்களை காப்பாற்றும் மிதவை சைக்கிள் - கீழக்கரை இரட்டையர்களின் புதிய முயற்சி

நீரில் சிக்கியவர்களை காப்பாற்றும் மிதவை சைக்கிள்

பெருவெள்ளம், பேரிடர் காலங்களில், பொதுமக்களை மீட்கும் நோக்கத்தில் மிதவை சைக்கிளை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள்.

 • Share this:
  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெருவைச் சேர்ந்த இரட்டையர்கள் நஸ்ருதீன் மற்றும் அசாருதீன். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான இருவரும் பல்வேறு சமூக சேவைகளில் தங்களை அர்ப்பணித்து வந்துள்ளனர். குறிப்பாக, கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, ஆதரவற்ற நபர்களின் உடல்களை மீட்டு முறைப்படி இறுதிமரியாதை செய்வது உள்ளிட்ட நற்செயல்களை செய்து வந்தனர். இந்நிலையில் மழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், தண்ணீரில் சிக்கித் தவிக்கும் எளிய மக்களை காப்பாற்றும் நோக்கத்தில் சிந்தித்த அவர்கள், தண்ணீரில் மிதக்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளனர்.

  12 தண்ணீர் கேன்கள், இரும்பு கம்பிகள், சைக்கிள் சக்கரங்கள் மற்றும் படகுகளுக்கு தேவைப்படும் புரொப்பெல்லர் கருவியை கொண்டு உருவான இந்த வாகனத்தை, கீழக்கரை கடலில் மிதக்கவிட்டு சோதனை செய்தனர்.

  இந்த மிதவை சைக்கிள் 180 கிலோ எடை வரை தாங்கும் எனவும், 10 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் எனவும் கூறுகின்றனர் இரட்டைச் சகோதரர்கள். மேலும் இந்த சைக்கிளில் 3 பேர் செல்லும் வகையில் வசதி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க...விசாரணை கைதி மர்ம மரணம் - காட்டிக்கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை: நடந்தது என்ன?

  கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தபோது, இதுபோன்ற சைக்கிளை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக கூறும் சகோதரர்கள், விரைவில் இதனை மேம்படுத்தி 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் மாற்றப்போவதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.  பெருந்தொற்று காலத்திலும், பொது சேவையாற்றும் இந்த சகோதரர்களை, கீழக்கரை பகுதி மக்கள் பெருமிதத்துடன் பாராட்டுகின்றனர்.
  Published by:Vaijayanthi S
  First published: