மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 6 விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது.
மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருப்பதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதோடு காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக சுழன்று அடித்துக் கொண்டு இருக்கிறது.
இந்த மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து, இன்று பகல் 12 மணி தூத்துக்குடி செல்லும் விமானம், பிற்பகல் 2:25 மணிக்கு சீரடி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதை போல் தூத்துக்குடியில் இருந்து மாலை 3:35 மணிக்கு சென்னை வரும் விமானமும், சீரடியில் இருந்து மாலை 6:30 மணிக்கு சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இது போல் சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி மற்றும் சீரடி விமான சேவைகள் 4 விமான சேவைகள் ரத்தாகி உள்ளன.
அதோடு சென்னையில் இருந்து மும்பை, மதுரை, தூத்துக்குடி, ஹுப்ளி, கண்ணூர், கோலாலம்பூர், சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் 11 விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
இதையும் படிங்க: வலுவடைந்த மாண்டஸ்.. அதிதீவிர புயலாக கரையை கடக்கும் - வானிலை மையம் அலெர்ட்
இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு விமானங்கள் ரத்தாகி உள்ளன. இதனால் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இதுவரை 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து இன்று இரவு 7:10 மணிக்கு மங்களூர் செல்ல வேண்டிய விமானமும், அதைப்போல் மங்களூரில் இருந்து இன்று இரவு 11:05 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இதுவரையில் சென்னை விமான நிலையத்தில் மாண்டஸ் புயல் காரணமாக, தூத்துக்குடி, சீரடி, மங்களூர் ஆகிய 6 விமான சேவைகள் ரத்தாகி உள்ளன. மேலும் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில், மாண்டஸ் புயலை சமாளிக்கும் விதத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது குறித்து, உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று, புதன் மாலையில், சென்னை விமான நிலையத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் விமான பயணிகள், விமானங்கள் பாதுகாப்பதற்காக, அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் தற்போது இந்த விமானங்கள் ரத்து, விமானங்கள் தாமதம் ஆகியவைகள் இருக்கின்றன என்றும், விமானங்கள் ரத்து, தாமதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai Airport, Cyclone Mandous, Flight