நாளை தேர்தல்: கோவையில் போலீசார் கொடி அணிவகுப்பு

Youtube Video

சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறை சார்பில் 3 இடங்களில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

 • Share this:
  கோவை வின்சன்ட் சாலையில் இருந்து உக்கடம் காவல் நிலையம் வரை ஒரு அணிவகுப்பும், மரக்கடை பகுதியிலிருந்து ஆர்எஸ் புரம் காவல் நிலையம் வரை ஒரு அணிவகுப்பும் நடைபெற்றது.

  இதேபோன்று டாடாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் இருந்து ரத்தினபுரி பகுதி வரை மூன்றாவது அணிவகுப்பு நடத்தப்பட்டது. கோவை மாநகர காவல்துறையினருடன் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, சி.ஆர்பி.எப் மற்றும் ஊர்காவல் படையினர் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.

  மேலும் படிக்க... தேர்தல் பணிமனை முன்பு தொண்டர்களை குவித்த செந்தில் பாலாஜி...

  போலீசார் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி, பேண்ட் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு நடைபெற்றது. ஒவ்வொரு கொடி அணிவகுப்பிலும் முந்நூறுக்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: