பிரபல தனியார் வங்கியில் திடீரென்று வட்டி மாற்றப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிலும் வங்கி முதலீடு திட்டத்தில் இப்படி செய்தது பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.
எந்தவித பயமும் இன்றி பலரும் நம்பி முதலீடு செய்யும் திட்டமாக பிக்சட் டெபாசிட் திட்டங்கள் இருந்து வருகிறது. முதலீட்டாளர்களிடம் ரிஸ்க் இல்லாத முதலீடு எது என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் பிக்சட் டெபாசிட் திட்டம் தான். மாதங்கள் ஆண்டுகள் வரை தொடங்கும் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் நல்ல வருவாய் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெரும்பாலும் முதலீடு செய்வார்கள். அந்த வகையில் வட்டி இந்த திட்டத்தில் பெரும் பங்கு உள்ளது. இந்நிலையில் பிரபல தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சமீபத்தில் இந்த வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் எடுத்திருக்கும் இந்த முடிவு கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி தான். இந்த வங்கியில் இதற்கு முன்பு மற்ற தனியார் வங்கிகளை காட்டிலும் நல்ல வட்டி கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஆக்ஸிஸ் வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு கீழான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.இதுக்குறித்து முழு விபரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இதுப்போன்ற பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டியை குறைப்பது முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதற்கான ஈர்ப்பை குறைக்கும். அதுமட்டுமில்லை சமீப காலமாக பல வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டியை குறைத்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த வகையில் தற்போது ஆக்ஸிஸ் வங்கியும் சேர்ந்துள்ளது. அதாவது ஆக்ஸிஸ் வங்கியில் மாற்றப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் இவை தான். 7 முதல் 14 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.50% வட்டி, 15 முதல் 29 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.50% வட்டி, 30 முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 3% வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3% வட்டி 46 முதல் 60 நாட்கள், 61 முதல் 3 மாதங்களுக்குள்ளான திட்டங்களுக்கும் பொருந்தும். இதே போல் அடுத்து வரும் சேமிப்பு மாதங்களை பொருத்து வட்டி மாற்றப்பட்டுள்ளது. இதுக்குறித்த கூடுதல் தகவல்களை ஆக்ஸிஸ் இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.