• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தூத்துக்குடியில் லோடு ஆட்டோ விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு..

தூத்துக்குடியில் லோடு ஆட்டோ விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு..

தூத்துக்குடி சாலை விபத்து

தூத்துக்குடி சாலை விபத்து

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே கூலிவேலைக்கு 35 பெண்களை லோடு ஆட்டோவில் ஏற்றிசென்று விபத்திற்குள்ளான விவகாரத்தில் ஐந்துபெண்கள் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.லோடு ஆட்டோவில் பெண்கள் ஏற்றிசெல்லப்பட்டது ஏன்?விபத்திற்கு காரணம் யார்?

  • Share this:
    விலங்குகளை ஏற்றிசெல்வதை போன்று வேலைக்கு செல்லும் பெண்களை லோடு ஆட்டோவில் ஏற்றி சென்று விபத்துக்குள்ளாக்கியுள்ளனர். இதில் ஐந்து பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    திருநெல்வேலி மாவட்டம் மணப்படை வீடு திருமலை கொழுந்துபுரம் கிராம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பெண்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூலிவேலை செய்ய செல்வது வழக்கம். செவ்வாய்கிழமை காலை அதே கிராமத்தை சேர்ந்த 31 பெண்கள் விவசாய பணிக்காக ,ஓரே லோடு ஆட்டோவில் ஏற்றப்பட்டு அழைத்து சென்றுள்ளனர்.

    ஆட்டோ தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே ,திருப்பத்தில் வந்த போது சாலையோர பாலத்தில் மோதி அருகில் இருந்த ஓடையில் கவிழ்ந்தது. திடீரென லோடு ஆட்டோ கவிழ்ந்ததால் பிடிக்க பிடிமானம் இல்லாத பெண்கள் அனைவரும் ஓடையில் விழுந்துள்ளனர். இதில் லோடு ஆட்டோவும் ஓடையில் கவிழ்ந்ததில் பேச்சியம்மாள், ஈஸ்வரி, மலையழகு, கோமதி, மற்றொரு பேச்சியம்மாள் என்ற ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலையே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் ஆட்டோவில் பயணித்த 26 பேர் படுகாயங்களுடன் ஓட்டப்பிடாரம் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மணியாச்சி காவல்துறையினர் சடலங்களை மீட்டு விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கினர்.

    மேலும் படிக்க... புதுச்சேரி:முதலமைச்சர் நாராயணசாமிக்கும்,கிரண்பேடிக்கும் நடந்த மோதல்கள்

    முதற்கட்ட விசாரணையில் அளவிற்கு அதிகமாக நபர்களை எந்த பாதுகாப்பும் இல்லாமல் வேகமாக சென்றது தான் விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. லோடு ஆட்டோ ஓட்டுநரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோடு ஆட்டோ விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மணப்படை வீடு கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: