ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கடலூரில் ஊரடங்கு காலத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கைது

கடலூரில் ஊரடங்கு காலத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கைது

திருடப்பட்ட பைக்குகள் உடன் கைது செய்யப்பட்டவர்கள்

திருடப்பட்ட பைக்குகள் உடன் கைது செய்யப்பட்டவர்கள்

கடலூரில் ஊரடங்கு காலத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா வைரஸ் தொற்று பரவமால் இருக்க மத்திய மாநில அரசுகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தியது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடி செல்வது தொடர்பாக அதிகளவில் காவல் நிலையத்திற்ககும் கடலூர் டிஎஸ்பி அலுவலகத்திற்க்கும் புகார்கள் குவிந்தன.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீ அபிநவ் உத்தரவின்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் கடலூர் முதுநகர் மற்றும் தனிப்படை போலீசார் இருசக்கர வாகனங்கள் திருடும் நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

பல இடங்களில் காவலர்களால் வைக்கப்படுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு திருடர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே போலிசார் வாகன தனிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் முககவசம் அணியாமல் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது 3 நபர்களும் முரண்பாடான தகவல்கள் கூற, இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக மூன்று நபர்களையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கடலூர் ஆலப்பாக்கம் மாந்தோப்பு சேர்ந்தவர்கள் அப்பு, ரித்தீஷ், கம்பளி மேடு சேர்ந்தவர் ஈசமணி என தெரியவந்தது. பின்னர் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் ஆவணங்களை கேட்டபோது, இந்த இரு சக்கர வாகனம் திருடிய வாகனம் என கூறினர்.

மேலும் கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடி கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் குறவன்மேடு கிராமத்தை சேர்ந்த தீனா மற்றும் அவரது நண்பரான குறிஞ்சிப்பாடி விருப்பாச்சியை  சேர்ந்த ஹனீப் என்பவரிடம் குறைந்த விலைக்கு இருசக்கர வாகனம் விற்பனை செய்யப்படும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

Also read... அடுத்த வாரம் திருமணம்... கல்லூரி மாணவி தற்கொலை...! காரணம் என்ன?

மேலும் இதுநாள் வரை 19 இருசக்கர வாகனங்கள் திருடி சுமார் 15 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்நது 19 வாகனங்களையும் பறிமுதல் செய்ய குற்றவாளிகளின் வீட்டிறக்கு சென்றனர். அப்போது வீட்டு தோட்டம் மற்றும் மெக்கானிக் கடையில் இருந்த  19 வாகனங்களை காவல. நிலையத்திறக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த திருடிய மூன்று நபர்கள் மற்றும் மெக்கானிக் 2 நபர்கள. உட்பட 5 நபர்களையும் போலீசார் கைது செய்து 19 இருசக்கர வாகனங்களையும் மீட்டனர். இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தனிப்படையினருக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Cuddalore