நாமக்கலில் லாரி மீது மோதிய கார்! குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த சோகம்

நாமக்கலில் லாரி மீது மோதிய கார்! குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த சோகம்
மாதிரி படம்
  • News18
  • Last Updated: September 21, 2019, 8:25 PM IST
  • Share this:
நாமக்கல்லில் லாரி மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் சரவணன். அவர், புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, அவரது குடும்பத்தினருடன் காரில் நாமக்கல் எருமப்பட்டியில் உள்ள தலைமலை கோவிலுக்கு சென்றார். கோவிலில் தரிசனம் செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பும்போது, மாணிக்கநத்தம் என்னுமிடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே துறையூர் நோக்கி சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Also see:

First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading