Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் அதிக ஆக்டிவ் கொரோனா பாதிப்புகளைக் கொண்ட ஐந்து மாவட்டங்கள்..!

தமிழ்நாட்டில் அதிக ஆக்டிவ் கொரோனா பாதிப்புகளைக் கொண்ட ஐந்து மாவட்டங்கள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் அதிகமாக இருப்பதால் நெல்லை மாவட்டத்தில் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ்நாட்டில் 100-க்கு அதிகமான ஆக்டிவ் பாதிப்பு கொண்ட ஐந்து மாவட்டங்கள்- சென்னை , செங்கல்பட்டு , திருவள்ளூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகும்.

    கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 28 மாவட்டங்களில் 100-க்கும் குறைவான கொரோனா நோயாளிகளே மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னையில் 5691 பேர், செங்கல்பட்டில் 365, திருவள்ளூரில் 380, திருநெல்வேலியில் 155 பேர் , திருவண்ணாமலையில் 114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மே 1-ஆம் தேதி சென்னையை தவிர மற்ற நான்கு மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. செங்கல்பட்டில் 38 பேர், திருநெல்வேலியில் 7பேர், திருவண்ணாமலையில் 5 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். சென்னையில் அப்போது 1082 கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்தனர்.

    கோயம்பேடு தொற்று பரவல் காரணமாக செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது. மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் அதிகமாக இருப்பதால் நெல்லை மாவட்டத்தில் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளன.

    ஆரம்பத்தில் தொற்று இல்லாத மாவட்டங்களாக இருந்த தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மீண்டும் அதே நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. தருமபுரியில் ஒருவர், கிருஷ்ணகிரியில் இருவர், புதுக்கோட்டையில் 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Gunavathy
    First published:

    Tags: Chengalpet, Chennai, CoronaVirus, Thirunelveli, Thiruvallur, Thiruvannamalai

    அடுத்த செய்தி