வைகை அணை நீர்மட்டம் அதிகரிப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் அதிகரிப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணை
  • News18
  • Last Updated: October 15, 2018, 1:35 PM IST
  • Share this:
வைகை அணை நீர் மட்டம் 66 அடி எட்டியதை தொடர்ந்து, ஐந்து மாவட்ட மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, 71 அடி உயரம் கொண்டது. இதில் 69 அடி வரை நீரைத் தேக்கலாம். தற்போது அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளதால் பாதுகாப்பு கருதி, ஆற்றின் கரையோரமுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நொடிக்கு 2,510 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அணையில் இருந்து பாசன மற்றும் குடிநீர் தேவைக்காக  1460 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு பருவ மழை அதிக அளவு பெய்ததன் காரணமாக, கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு  வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் முல்லை பெரியாறு மற்றும் வருசநாடு மூல அணையிலிருந்து நீர்வரத்து சீராக இருப்பதால், வைகை அணை இன்னும் சில தினங்களில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
First published: October 15, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading