வங்கக்கடலில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடக்கம்

கோப்புப் படம்

மீன்பிடி தடை காலம் இன்று முதல் தொடங்கியது. இதனையடுத்து வலை, என்ஜின்களை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

 • Share this:
  இந்திய கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக சில குறிப்பிட்ட நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அந்த வகையில், முதல் கட்டமாக வங்கக்கடலில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த காலங்களில் மீனவர்கள், நாட்டுப்படகுகளில் சென்று கடலோரப்பகுதிகளில் மட்டும் மீன்பிடிக்கலாம். ஆழ்கடலுக்கு செல்ல அனுமதியில்லை.

  இதன் மூலம், குறைவான மீன்களே கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து வலை, என்ஜின்களை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

  இந்தநிலையில் அசைவ பிரியர்கள் இது குறித்து கூறுகையில், “61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்து விட்டதால், விலை உயர்ந்த மீன்கள் கிடைப்பது மிகவும் அரிது” என கவலையுடன் தெரிவித்தனர். இந்த மீன்பிடி தடை காலம் முடிந்த பிறகு வழக்கம்போல் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க... 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க கோரிக்கை: இன்று ஆலோசனை  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: