ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

விசைப்படகுகள்

விசைப்படகுகள்

ராமேஸ்வரம் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பு முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையை கண்டித்து, ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்து உடன் அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த 6 விசைப்படகு 43 மீனவர்கள் முதல்கட்டமாக சிறைபிடித்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும், மண்டபம் பகுதியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகு அதிலிருந்த 12 மீனவர்களையும் நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மண்டபம் சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், ராமேஸ்வரம் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பு முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல கோடி அந்நியச் செலாவணி ஈட்டுகொடுக்கக்கூடிய  இந்த மீன்த்தொழில் வேலை நிறுத்த போராட்டத்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Must Read : இலங்கைப்படையால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: மீட்க மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மேலும், இலங்கை அரசை கண்டித்தும் மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று காலை 10 மணியளவில் ராமேஸ்வரம் மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கங்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : சேதுகுமரன், ராமேஸ்வரம்

First published:

Tags: Fishermen, Rameshwaram