மெரினாவை தூய்மை படுத்துவதாக கூறி தங்களை மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மெரினாவில் கடை நடத்துபவர்கள் மற்றும் மீனவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மெரினா கடற்கரை நொச்சிகுப்பத்தில் இருந்து கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் மற்றும் வணிகர்கள் முறைப்படி மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 4,500 லிருந்து தினமும் 500 ரூபாய் என மீன்பிடி தடைகாலமான 65 நாட்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் மற்றும் மீனவர்கள் வியாபாரம் செய்வதற்கான மாற்று இடம் வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால், தற்போது தூய்மைப்படுத்தும் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீனவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மெரினாவை தூய்மை படுத்துவதாக கூறி தங்களை மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மெரினாவில் கடை நடத்துபவர்கள் மற்றும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மீனவர்களின் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை ஜனவரி 10 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.