ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நிலக்கரி இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு- தூத்துக்குடி மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம்

நிலக்கரி இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு- தூத்துக்குடி மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம்

கல்லாலமொழி அருகே போராட்டம்

கல்லாலமொழி அருகே போராட்டம்

திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

திருச்செந்தூர் அருகே கல்லாலமொழியில் மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கடலில் இறங்கி நிலக்கரி இறங்குதளம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் அருகே அமைந்துவரும் அனல்மின்நிலையத்துக்குத் தேவையான நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளால் அப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்துவிடும் அபாயம் இருப்பதால் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இத்திட்டத்தைக் கைவிடுமாறு பல முறை கோரிக்கை வைத்தும் தொடர்ந்து கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதனால், இன்று அப்பகுதி மக்கள் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடலில் இறங்கி போராடத் தொடங்கி உள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் இப்போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: திமுக, அதிமுக இரண்டுமே அகற்றப்பட வேண்டிய ஊழல் கட்சிகள்-கமல்ஹாசன்

Published by:Rahini M
First published:

Tags: Lok Sabha Key Constituency