சீன அதிபர் வருகை: நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை!

ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீன அதிபர் வருகை: நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 10, 2019, 11:15 AM IST
  • Share this:
சீன அதிபர் வருகையொட்டி மாமல்லபுரத்தை சுற்றியுள்ள மீனவர்கள் நள்ளிரவு முதல் கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் நாளை மாமல்லபுரம் வருகின்றனர். இரு நாட்டு தலைவர்களின் பாதுகாப்பையொட்டி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏனைய கிராம மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது மீன்துறை உதவி இயக்குநரிடம் பதிவெண் சான்று பெற்று செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மறு உத்தரவு வரும் வரை மாமல்லபுரத்தை சுற்றியுள்ள மீனவர்கள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் மீன்வளத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Also see...

First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading