தடைக்காலம் முடிந்தும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள் - இதுதான் காரணம்

மீன்பிடி தடைக்காலம் முடிந்த பின்னரும், சென்னை, புதுவை, கடலூர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

தடைக்காலம் முடிந்தும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள் - இதுதான் காரணம்
கோப்புப் படம்
  • Share this:
மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இருப்பது வழக்கம். ஆனால், கொரோனா பாதிப்பு, ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதலே மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

இதையடுத்து, மீனவர்களின் நலன் கருதி, தடை காலத்தை 47 நாட்களாக குறைத்து, இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் அரசு அனுமதி வழங்கியது. ஆனால், ஊரடங்கு ஐந்தாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மீன் வாங்க ஆர்வம் காட்டமாட்டார்கள் என்றும், போக்குவரத்து கட்டுப்பாட்டால் ஏற்றுமதி, இறக்குமதி பாதித்து, கடும் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் சென்னை விசைப்படகு மீனவர்கள் தெரிவித்தனர்.

எனவே, வருகின்ற 15- தேதிக்கு பின்பு கடலில் மீன் பிடிக்க செல்வதாக மீனவர் சங்கத்தினர் கூறியுள்ளனர். இதனால்,சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.


இதேபோன்று புதுச்சேரியில் உள்ள 18 மீனவ பஞ்சாயத்தார் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மத்திய அரசு திடீரென தடை காலத்தை குறைத்ததால் படகுகளை சீர்செய்யும் பணி இன்னும் தொடங்கவில்லை என்று கூறியுள்ளனர். எனவே, முழு ஆயத்தமான பின்பு மீன்பிடிக்க செல்வோம் என்றும் கூறியுள்ளனர்.

இதேபோன்று, சீர்காழி அருகே திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி மீனவ கிராமங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தற்பொழுது மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மீன் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஒரு சில மீனவ கிராமத்தினர் பைபர் படகு மூலம் மட்டும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்

கடலூரில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் 24 மணி நேரத்தில் மீண்டும் கரை திரும்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால், துறைமுகம் உள்ளிட்ட பல பகுதிகளில் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெரிய படகுகளில் கடலுக்கு சென்றால் மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும் என்றும், ஆனால், 24 மணி நேரத்தில் திரும்ப வர முடியாது என மீனவர்களை தெரிவித்துள்ளனர். எனவே, அரசு உடனடியாக கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோரியுள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், தடைக்காலம் முடிந்ததால், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று அதிகாலை விசைப்படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு சென்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் உள்ள 241 விசைப்படகுகளில், நாள்தோறும் 120 படகுகள் வீதம் கடலுக்கு செல்லவும், பிடித்து வரும் மீன்களை தனிமனித இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்யவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி இன்று அதிகாலை 120 விசைப்படகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

Also read... சிதம்பரத்தில் இருந்து 4 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம் - கடும் கட்டுப்பாடுகள்

நேரில் வந்து தைரியமாக புகாரளித்த பெண் - ’முதல்வன்’ பட பாணியில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் செல்லூர் ராஜு


கேஸ் சிலிண்டர் விலை உயர்வு - சமீபத்திய விலை நிலவரம் என்ன?

பிரதமர் மோடி படத்துடன் போஸ்டர் - மதுரையில் 4 பேர் கைது


நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார்

ரயில் பயணத்துக்கு இ-பாஸ் பெறுவது எப்படி...? என்னென்ன தேவை...?

சினிமா நடிகர்கள் & நடிகைகள் புகைப்படங்கள்


Also see...
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading