புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
  • Share this:
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள், சனிக்கிழமை மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்களில், சின்ன அடைக்கலம் என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் சின்னபாண்டி, அவரது மகன் மணிகண்டன், அந்தோணி ஆகியோர் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களை படகுடன் சிறைப்பிடித்தனர்.


இதேபோல், அதிகாலையில் தமிழக கடற்கரையில் இருந்து 32 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்த மேலும் 8 மீனவர்களையும், 2 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து 11 பேரிடமும் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, கரை திரும்பிய மற்ற மீனவர்கள், மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் தங்களை விரட்டியடித்ததாக தெரிவித்தனர்.
First published: February 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading